திருப்பூர் மாவட்டம், லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பனியன் வேஸ்ட் அட்டைகள், கேன்கள் எரிந்து சாம்பலாகின.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் என்பவர் இங்கு பழைய பேப்பர் கிடங்கு நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலையில் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அட்டை பெட்டிகள், நூல் கோன்கள் மீது பற்றிய தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் குடோனில் இருந்த பனியன் அட்டை பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post