வெளிநாட்டுக் கழிவுகளை கண்டெய்னர் லாரிகளில் கொண்டு வந்த 7 பேருக்கு, தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து செங்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம், குற்றாலம் செல்லும் சாலையில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவதாக செங்கோட்டை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், சுகாதாரத் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டெய்னரில் இறக்கப்பட்ட கழிவுகள் அனைத்தையும் அதே லாரியில் மீண்டும் ஏற்ற உத்தரவிட்டனர்.
5 லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கழிவுகளை கொண்டு வந்த குற்றத்திற்காக தலா 5 ஆயிரம் வீதம் 7 நபர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.