ரிசர்வ் வங்கிக் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை

டெல்லியில் மத்திய ரிசர்வ் வங்கிக் குழுவினருடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்துவது வழக்கமான நடைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவினருடன் பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் நிதி ஒருங்கிணைப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்க வேண்டிய இடைக்கால ஈவுத்தொகை குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால ஈவுத்தொகையாக வழங்கிய நிலையில், இந்த நிதியாண்டில் 28 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால ஈவுத் தொகை வழங்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

Exit mobile version