தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மக்களவை தேர்தலில் 845 பேர் போட்டியிடுகின்றனர். ஆண்கள் 779 பேரும் பெண்கள் 65 பேரும் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். திருநங்கை ஒருவரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 42 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த பட்சமாக நீலகிரியில் 10 பேர் களத்தில் உள்ளனர்.

இதேபோல 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். ஆண்கள் 241 பேரும் பெண்கள் 28 பேரும் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக பெரம்பூரில் 45 பேரும் குறைந்தபட்சமாக குடியாத்தம் தொகுதியில் 7 பேரும் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை அடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Exit mobile version