எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சண்டை சேவல்கள் விற்பனை களைகட்டியது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வாரச் சந்தையில் சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இந்த சண்டை சேவல்களை வாங்குவதற்காக சேலம், தர்மபுரி, பெங்களூர், ஆந்திரா மாநிலங்களில் இருந்து பலர் வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்திருந்தோர் சண்டை சேவல்களை சண்டையிட வைத்து அதற்கு தகுந்தார்போல், சுமார் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். இதில் மயில்,காகம், வள்ளு, செங்கரும்பு எனப் பல்வேறு சண்டைக்கோழிகள், விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
Discussion about this post