விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கால்நடை திருவிழா பொள்ளாச்சியில் தொடங்கியது. கொங்கு மண்டல பாரம்பரியத்தை விளக்கும் வகையில், ஆண்டு தோறும் கால்நடை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கொங்குநாடு வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழா, 108 கோமாதா பூஜையுடன் துவங்கியது. பூஜையின்போது பசுக்களுக்கு அகத்திகீரை உள்ளிட்டவை உணவாக வழங்கப்பட்டது.
நிகழவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக, காங்கேயம் காளைகள், குதிரை, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அழகு போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
Discussion about this post