தமிழகத்தில் பெண் புரோகிதரா..? ஆச்சரியத்தில் மக்கள்

சென்னையில்  இந்து மதத்திற்குரிய  சடங்கு முறைகளை பின்பற்றி ஒரு பெண் புரோகிதர் புதுமையான திருமணத்தை நடத்தி வைத்துள்ள சம்பவம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சுஷ்மா ஹரினி மற்றும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட விக்னேஷ் ராகவன் ஆகிய இருவரும் தங்களின் திருமணம் புதுவிதத்தில் நடைபெற்ற வேண்டுமென ஆசைப்பட்டுள்ளனர்.

இருவேறு சமூகங்களை பின்னணியாகக் கொண்ட அவர்களது உறவினர்களுக்கும் ஏற்றவாறு இரு சமூக சடங்களுகளையும் இணைத்து அவர்கள் இந்த திருமணத்தை நடத்த ஒரு புரோகிதர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பி உள்ளனர்

அந்த வகையில் மணமக்களுக்கு மகேஸ்வரி  என்ற பெண் புரோகிதர் கிடைத்துள்ளார். மைசூரைச் சேர்ந்த பிரமரம்ப மகேஸ்வரி வேத மந்திரங்களை முறையாக பயின்று அதில் தேர்ச்சியும் பெற்றவர். அவர் திருமண புரோகிதராகவும் செயல்பட்டு திருமணத்தை நடத்திக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.

நமது பாரம்பரியத்தில் மந்திரம் ஓதி திருமணத்தை நடத்திவைக்கும் தொழில் என்பது ஓர் ஆண்களின் கோட்டையாகவே இருந்து வந்ததது அதனை மகேஸ்வரி உடைத்துள்ளார். மேலும் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்வி மகேஸ்வரியின் மந்திரம் ஓதும் திறமையைக் கண்டு பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version