கொரோனாத் தொற்றுக் காரணமாக 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் சமூக இடைவெளியை அனைவரும் பேண வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் ஹரியாணா மாநிலத்தினைச் சேர்ந்த முன்முன் மஜ்ஹி எனும் பெண் தன்னுடைய பத்து வயது மகனுடன் மூன்று ஆண்டுகள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது கணவர் சுஜன் மஜ்ஹியை வீட்டிற்குள் சேர்க்கவில்லை. அவர் வீட்டின் வெளியில் இருந்த கார் நிறுத்தும் இடத்தில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இருவரும் வீடியோ காலில் மட்டுமே பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் கணவர் சுஜன் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் சரிவர மனைவி தன்னை வீட்டிற்குள் சேர்க்காமலும் அதைக்குறித்துப் பேசினாலே அச்சத்தோடு உள்ளே யாரும் வரக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் மளிகை சாமான்கள் வாங்கி மூன்று வருடங்களாக வீட்டின் வாசலில் வைத்துவிட்டு சுஜன் சென்றுவிடுவாராம். அவரது மனைவி வீட்டைக்கூட்டிக் குப்பைகளை வீட்டின் மூலையில் வைத்துவிடுவாராம். இது தொடர்ந்து நடைபெற்றதால் சுஜன் போலிஸ் அனுமதியுடன் வீட்டை உடைத்து மனைவி மற்றும் மகனை வெளியே வர வைத்துள்ளார்.
Discussion about this post