விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏரியை ஆக்கிரமித்து, விவசாயிகளை மட்டும் இன்றி வன விலங்குகளையும் அலைக்கழிக்கும் திமுக பிரமுகர் சுப்பிரமணியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏரி உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வது திமுகவினரின் வாடிக்கையாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி அருகே செம்பியன்மாதேவி வனப் பகுதியையொட்டி அமைந்துள்ள ஏரியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான சுப்பிரமணியன் என்பவர் சுமார் 6 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்தது மட்டும் இன்றி டீசல் என்ஜின் கொண்டு ஏரி நீரை உறிஞ்சியும் விவசாயம் செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வரும் வழித்தடத்தையும் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதால் விலங்குகளும் அலைக்கழிக்கபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணியன் மீது பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Discussion about this post