சேப்பங்கிழங்கினை அதிகளவு பயிரிட்டு வரும் விவசாயிகள்

திருவண்ணாமலையில், பயிரிடப்பட்ட சேப்பங்கிழங்கு இந்த ஆண்டு நல்ல மகசூலுடன் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சேப்பங்கிழங்கினை அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். ஆறு மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் சேப்பங்கிழங்கு பயிரிட்டதில், ஏக்கருக்கு 7 முதல் 10 டன் வரை கிழங்கு கிடைத்திருப்பதாகவும், மேலும் கிலோ ஒன்றுக்கு 20 முதல் 25 ரூபாய் வியாபாரிகள் பெற்றுக் கொள்வதால் ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version