திண்டுக்கல் மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்களைச் சீரமைத்து வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி கூறியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 80 பணிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக 25 கோடியே 88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தற்போது 76 பணிகள் தொடங்கப்பட்டு குளங்கள், வரத்து வாய்க்கால்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குடி மராமத்து பணிகள் நடைபெறும் தொப்பம்பட்டி அரண்மனை ஓடை குளம் மற்றும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.