சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சைமலை அடிவாரத்தில் புதிய நீர்த்தேக்கம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சைமலை அடிவாரத்தில் பொன்னி ஆற்றின் குறுக்கே நீர்தேக்கம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற
கூட்டத்தில், பொன்னி ஆற்றின் குறுக்கே 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் கட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அப்பகுதி விவசாயிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சரை நேரில் சந்தித்த விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர், அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த அணைக்கட்டு மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.