கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் விலை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் தினசரி சந்தை இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, தக்காளி, வாழை, மிளகாய், தட்டைபயிறு, தேங்காய், வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ஒன்றுக்கு 3 முதல் 5 ரூபாய் வரையே விற்பனை ஆகிறது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெட்டிகள் விற்பனை ஆகாமல் உள்ளதால் சுமார் 6 டன் தக்காளி விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள்.