திருவாரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் முழுதும் நடப்பாண்டில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றது. கடந்த சில நாட்களாக பல இடங்களில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நன்னிலம் அருகே குவளைக்கால் பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்து 15 நாட்களாக நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ளனர்.
எனவே பழைய முறைப்படி ஆன்லைன் இல்லாமல் நேரடிநெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post