திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாடுகளிடமிருந்து விவசாயத்தை காக்க வேலி போன்று சேலைகளை அமைத்து பாதுகாக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மலையடிவாரப் பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயிகள், பருத்தி மற்றும் காய்கறிகளை விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் போதிய மழை இல்லாததால், விவசாயிகள் விளைவித்த பயிர்களை, மாடுகள் இரவில் வந்து மேய்ந்து செல்கின்றன. இதிலிருந்து விளைநிலங்களை காக்க விவசாயிகள், சேலைகள் மற்றும் துணிகளை வேலிகளில் கட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலைகளை இவ்வாறு வேலியில் கட்டுவதால், ஆபத்து இருப்பதாகக் கருதி விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்