விவசாயத்தை விடுத்து ஆடுகளை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்

முதுகுளத்தூர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் ஆடு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளில் விவசாயம் பொய்த்து வருவதால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு ஆடுகளை
வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது போதிய மழை இல்லாததால் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனார். ஆடுகளை வளர்ப்பதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயி மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுத்து, ஆடுகளுக்கான தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version