சம்பா சாகுபடிக்கு இயற்கை முறையில் நெல் பயிரிப்படுவதால், நல்ல மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் நூக்காம்பாடி கிராமத்தில் விவசாயிகள் முழுக்க இயற்கை முறையில் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி நெல் பயிரிடுவதற்கு ஒரு மாததிற்கு முன்னர் தழைச்சத்தான தக்கைப்பூண்டு பயிரிடுகின்றனர். அதன் பின்னர் உழவு செய்து நெல் நடவு செய்து சாகுபடி செய்கின்றனர். இது போன்று இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் நல்ல மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஏக்கரில் தக்கைப்பூண்டு விதை 10 கிலோ முதல் 12 கிலோ வரை விதைக்கின்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த நிலத்தில் நெல் பயிரிட தொடங்கினால் மண்வளமும் மேன்ப்படுத்தப்பட்டு, பயிர் செழிப்பாகவும் வளர்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ரசாயண உரங்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post