தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி நீலகிரி மாவட்ட விவசாயிகள் மலை காய்கறிகள் மற்றும் தேயிலையை ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. கோடை சீசன் முடிவடைந்த நிலையில், 7ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த முறை பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த முறை பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழையை எதிர் நோக்கி மலைப் பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூண்டு, தேயிலை உள்ளிட்டவற்றை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Discussion about this post