திருப்பூர் அருகே அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை அரசு நேரடி கொள்முதல் செய்ய வெண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், உடுமலை, குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அமராவதி மற்றும் பிஏபி தண்ணீரால் பாசன வசதி பெறுகிறது .இப்பகுதிகளில் இடைப்பட்டமாக சின்ன வெங்காயம் சாகுபடி பெருமளவில் நடந்து வருகிறது இங்கு உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள்,வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விவசாயிகளின் நன்மை கருதி வெங்காயத்தை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.