இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவின் மலைப் பிரதேசங்களில் கனமழை பெய்து வருகிறது. குடகுப் பகுதிக்கும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 20 ம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post