உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என்று முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதி பற்றி கேட்டதற்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தங்களை அவமானப்படுத்தியதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விருதுநகர் முதல் கோவை வரை 765கிலோ வாட் உயர் கோபுர மின் திட்டத்தை நிறுத்தக்கோரி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் மின் கோபுரம் மீது குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர்.
அப்போது அங்கு திரண்ட காவல்துறையினர், விவசாயிகளை தடுத்ததால் அரசை எதிர்த்து விவசாயிகள் முழக்கமிட்டனர். உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி முற்றிலுமான நிறுத்தப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய முதலமைச்சர் உறுதியளித்ததை சுட்டிக்காட்டி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டதற்கு, முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிக்கு தான் ஒன்றும் செய்ய முடியாது என்று அலட்சியமாக சொல்லி திருப்பி அனுப்பியதாக குற்றம் சாட்டினர்.