துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கடந்த ஆண்டு 100 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, இந்த ஆண்டு 70 ரூபாய் அளவில் குறைவாக கொள்முதல் செய்யபட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருச்சி-துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் வட்டாட்சியர் புஷ்பராணி விவசாயிகளின் குறைகளை கேட்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் பருத்தி விவசாயிகளின் குறைகளை கேட்காமல் வட்டாட்சியர் விவசாயிகளை புறக்கணித்தது ஏன் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Discussion about this post