கோடையின் வெப்பம் தணிக்க, மருத்துவ குணம் கொண்ட செவ்விளநீர் விவசாயம் மூலம், அதிக அளவு லாபம் பார்ப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரம் பகுதியில், செவ்விளநீர் மரங்கள் அதிகளவில் நடப்பட்டுள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய செவ்விளநீருக்கு, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால், செவ்விளநீர் விவசாயம், லாபம் தரும் தொழிலாகவும் விளங்குகிறது. நீர் பாய்ச்சி, முறை தவறாமல் களைகளை அப்புறப்படுத்தி, உரமிட்டு குழந்தையைப் போல் மரத்தை பராமரிப்பதாக கூறும் விவசாயிகள், மரத்தில் இருந்து 30 நாட்களுக்கு ஒருமுறைதான் காய்கள் பறிக்கப்படுவதாக கூறுகின்றனர். வேளாண் துறை அதிகாரிகள் நேரிலேயே வந்து ஆலோசனைகள் வழங்குவதாக தெரிவிக்கும் விவசாயிகள், விவசாய தகவல்கள் குறித்து அறிந்துகொள்ளும் உழவன் செயலி பயன் தரும் வகையில் உள்ளதாகவும், அரசுக்கு நன்றி கூறுகின்றனர்.