மணப்பாறை அருகே குடிநீர் பற்றாக்குறையை போக்க, தன் கிணற்று நீரை இலவசமாக வழங்கிவரும் விவசாயியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மானாங்குன்றம் பகுதியில் வறட்சியால் போதுமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இந்தநிலையில், அழகக்கவுண்டம்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிசாமி தனது கிணற்றில் உள்ள குடிநீரை தினந்தோறும் இலவசமாக வழங்கிவருகிறார். மின்மோட்டார் மூலம் வழங்கப்படும் இந்த நீரை சுற்றியுள்ள கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் பெற்றுச் செல்கின்றனர். கிராமத்தினர் பிடித்தது போக, எஞ்சிய உபரி நீரை வைத்து தனது தோட்டத்தில் வெண்டை, கத்தரி என பயிர் செய்து வருகிறார். பொது மக்களின் குடிநீர் தேவையை அறிந்து, உதவி வரும் விவசாயி பழனிசாமிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post