ஃபானி புயல் முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு 309 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், அதி தீவிரமாக வலுப்பெற்று நகர்ந்து வருகிறது. இது ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது ஒடிசாவை தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு முன்உதவித்தொகையை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்திற்கு 309 கோடி, ஆந்திராவுக்கு 200 கோடி, ஒடிசாவுக்கு 340 கோடி, மேற்கு வங்கத்துக்கு 235 கோடியை விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.