அதி தீவிர புயலான ஃபானி, மே 3ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடக்கும்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்க கடலில் உருவான ஃபானி புயல் அதி தீவிர புயலாக மாறி, ஒடிசா மற்றும் வட ஆந்திராவை அச்சுறுத்தி வருகிறது. இந்தநிலையில் வரும் மே 3ஆம் தேதி ஒடிசா மாநிலம் புரி மாவட்டம் உடையகிரி அருகே ஃபானி புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், மேற்கு வங்கத்தை அடைவதற்கு முன்னதாக கட்டாக், தென்கானல், ஜாஜ்பூரையும் தாக்கும் என தெரிவித்துள்ளது. புயல் காரணமாக வட ஆந்திராவிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும், வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post