செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்ல விஷச் சாராயம் குடிச்சி 22 பேர் உயிரிழந்த நிலையில, முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளச்சாராய இறப்பு சம்பந்தமாவும், கள்ளச்சாராயத்த தடுக்கிறது தொடர்பாவும் தலைமைச் செயலகத்துல ஆய்வுக் கூட்டம் நடத்தியிருக்காரு… எப்பவுமே கண்கெட்ட பின்னாடிதானே திமுக அரசாங்கம் கம்பு சுத்தும்.
அந்த கூட்டத்துல, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள விக்குறவங்க மேல பாரபட்சமின்றி குண்டர் சட்டத்துல நடவடிக்கை எடுக்கணும்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு… ஏற்கனவே, தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில ஈடுபடுறவங்கள, குண்டர் சட்டத்துல நடவடிக்கை எடுத்துட்டு வர்றது முதலமைச்சருக்கே மறந்துபோச்சோ என்னவோ.. கூட்டத்துல கலந்துக்கிட்டவங்களே மனசுக்குள்ள சிரிச்சிருப்பாங்க.. இவ்வளவு தூரம் ஆலோசனை கூட்டம் போட்டதுக்கு, கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவா செயல்படுறவங்க மேல குண்டர் சட்டம் பாயும்னு சொல்லியிருந்தாக் கூட சின்னதா ஒரு பயம் வந்துருக்கும்… ஆனா என்ன பண்றது… கள்ளச்சாராயம் விக்கிறவங்களும் திமுககாரங்களாவே இருக்காங்க… திமுக அமைச்சர் மாதிரியான ஆளுங்கதான் அவங்களுக்கு சப்போர்ட்டாவும் இருக்கிறாங்க… ஒருவேள அப்படி ஒரு உத்தரவு போட்டா உள்ள போறது பூராவுமே அவங்க ஆட்களாத்தான் இருப்பாங்க…அதனால, கூட்டம் போட்டது போட்டாச்சு…. ஒப்புக்குச் சப்பாணியா எதையாவது சொல்லலாமேன்னு முதலமைச்சர், ஏற்கனவே இருக்கிறதையே உத்தரவா போட்டுட்டு போயிருக்காரோன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க….