உலகம் முழுக்க 771 வகை கொரோனா வைரஸ்களா? உண்மை என்ன?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி  என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வந்தது கொரோனா தடுப்பூசி தொடர்பான செய்தியாக அது இருப்பதால் பலரும் உண்மை என்று நம்பி பகிரத் தொடங்கினர்.  ஆனால், அது பொய் என்று தற்போது மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

பரவும் தகவல்: 

கொரோனா ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஏற்ப மறு உருவாக்கம் பெற்று புதிய வகை கொரோனாவாக வடிவெடுக்கிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுக்க 771 வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் இருப்பதாக INSACOG (Indian SARS-CoV-2 Genomic Consortia) அறிவித்துள்ளது என்று அந்த செய்தி தெரிவித்தது.  

உண்மை என்ன? 

இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி என்றும், இதில் தெரிவிக்கப்பட்ட செய்திகள் அடங்கிய ஒரு பத்திரிகை செய்தியை அரசு வெளியிடவில்லை என்றும் அரசின் பத்திரிகை தகவல் மையம் தெளிவுபடுத்தியுள்ளது. 

இது தொடர்பாக Press Information Bureau – PIB ட்வீட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ட்வீட்டைப் பார்க்க Press information bureau tweet .

 

உங்கள் செல்போனுக்கும் இந்த பொய்ச்செய்தி வரலாம். கவனமாக இருங்கள். 

Exit mobile version