டெல்லியிலிருந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு ராஜதானி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சென்னைக்கு வழக்கமான ரயில்களை இயக்க வேண்டாம் என, முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே முன்பதிவு தொடங்கப்பட்ட காரணத்தினால், வரும் 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. மேலும், வழக்கமான ரயில்கள் இயக்கப்படாது எனவும் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களில் வரும் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட பயணிகளை, ரயில்வே துறை மூலம் தனிமைப்படுத்தி வைக்க, கடிதம் வாயிலாக முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post