ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குன்னூரிலிருந்து ரன்னிமேடு வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, தெற்கு ரயில்வே பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஏதுவாக வன விலங்குகளின் உருவங்களுடன் கூடிய கண்ணாடி மேற்கூரை கொண்ட சிறப்பு மலை ரயில், குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை கடந்த 27ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு மலை ரயிலில், முதல் வகுப்பிற்கு 450 ரூபாயும், 2ம் வகுப்பிற்கு 320 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் ரம்ஜான் விடுமுறைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஜூன் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.