ரஃபேல் போர் விமானங்களுக்கான தொகையில் பாதியளவு செலுத்தப்பட்டுவிட்டதாகவும் நவம்பர் மாதம் முதல் விமானங்கள் இந்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கான தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாகவும் இந்தாண்டு இறுதியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் இரண்டாம் தவணையாக செலுத்தப்படவுள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2022ம் ஆண்டுக்குள் மொத்த தொகையும் செலுத்தப்படும் என்றும் இந்தாண்டு நவம்பர் மாதம் துவங்கி 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து ரஃபேல் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், மென்பொருள் சான்றொப்ப பணிகளுக்கு கூடுதலாக 6 மாதங்கள் வரை ஆகும் என்பதால், 2022ம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இவ்விமானங்கள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post