திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழமையான கிணற்றை தூர் வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியாஞ்செட்டியபட்டி பகுதியில் 500 ஆண்டுகளுக்கு மேலாக ஊரணி கிணறு உள்ளது. இதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி மூலம் மூடப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தாத நிலை உள்ளது.
ஒட்டன்சத்திரம் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக மீண்டும் அந்த கிணற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post