தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு ஏப்ரல் 7 ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இணைந்து நடத்திய இந்தத் தேர்வில், சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 3 ஆயிரத்து 562 பேர் பங்கேற்றனர். பிரதான தேர்வு மே 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்க உள்ள நிலையில், முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற சிவில் நீதிபதிகள் உட்பட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.