சிவகங்கை மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேர்தல் பொறுப்பாளர்களான, அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள்
அமைச்சருமான தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோர், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி, கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்பங்களை பொறுப்பாளரிடம் வழங்கினார்கள்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, திமுகவின் ஆட்சியை மக்கள் விரும்புவதில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அம்மா கொண்டுவந்த மக்களுக்குப் பயன்படுகின்ற திட்டங்கள் ஒவ்வொன்றும் நிறுத்தப்பட்டு வருகின்றது என்றும் குற்றம்சாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ஸ்டாலின் ஒரு கொரோனா என்றால் உதயநிதி ஸ்டாலின் ஒரு உருமாறிய கொரோனா என்று விமர்சித்தார்.
உள்ளாட்சித்துறை தான் தனக்கு வேண்டும் என்று ஒற்றை காலில் உதயநிதி ஸ்டாலின் நிற்கிறார் என்றும் வைகைச்செல்வன் கூறினார். சாதாரணமாக அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள்,
இன்றைக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவராக முடியுமென்றால், அதற்கு ஒரே காரணம் அம்மாவின் வழிவந்த எடப்பாடியாரின் அரசு தான் என, அவர் பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post