தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல குடும்ப ஆட்சி – முன்னாள் அமைச்சர் தங்கமணி கண்டன உரை!

தமிழகத்தில் மக்களாட்சிக்கு பதிலாக குடும்ப ஆட்சி தான் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் தற்போது குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது என விமர்சித்தார். மேலும் மக்களிடம் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள விடியா அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் குரல் கொடுத்து, பல போராட்டங்களை நடத்திய பின்னரே மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறது எனக் கூறினார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, விடியா அரசு தற்போது உதவித்தொகை வழங்க டோக்கன் வழங்கி வருவதாக விமர்சித்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் குரல் கொடுத்து, பல போராட்டங்களை நடத்திய பின்னரே மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறது எனக் கூறினார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, விடியா அரசு தற்போது உதவித்தொகை வழங்க டோக்கன் வழங்கி வருவதாக விமர்சித்தார்.விடியா திமுகவினர் மின்சாரத்துறையில் ஊழல் செய்வதாலேயே மின்கட்டணத்தை உயர்த்துகின்றனர் என குற்றம்சாட்டினார். மேலும் விற்பனை குறைவாக நடைபெற்ற இடத்தில் இருந்த மதுபான கடைகளே மூடப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Exit mobile version