முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சரணடைவதில் இருந்து, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் பாலகிருஷ்ணா ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ் வழக்கில் பிப்ரவரி 7ஆம் தேதி சரணடைய கடைசி நாள் என்றிருந்த நிலையில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post