நடப்பாண்டில் பத்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலானது நடைபெற இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலுக்காக கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யமாறு மத்திய சட்ட அமைச்சகம் கோரியிருக்கிறது. இதற்கு கடந்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், அவற்றுடன் கூடிய கட்டுப்பாட்டு சாதனங்கள், ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் ரசீது வெளிவரும் எந்திரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், பழமையான எந்திரங்களை அழிப்பதற்கும் மத்திய பட்ஜெட்டில் ரூ.1,892 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது, மத்திய அமைச்சரவை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படும். மேலும் பொதுத்துறை நிறுவனங்களான பெல் மற்றும் எல்காட் ஆகியவற்றிடம் இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் ஆகிவற்றின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அதிகமாக தேவைப்படுகின்றன. ஆகவே, அதிகமான மின்னணு எந்திரங்கள் வாங்கப்படுகின்றன.
Discussion about this post