திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க சாதாரண நாட்களில் 60 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வதும், வார விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் எண்பதாயிரம் பக்தர்கள் வந்துசெல்வதும் வழக்கம். சனி, ஞாயிறு வார விடுமுறை, நாளை பக்ரீத் அரசு விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதால் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளும் நிரம்பி 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சப்தகிரி தங்கும் விடுதி வரை பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Discussion about this post