ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலானது வருகிற பிப்ரவரி 27ஆம் தெதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டமானது அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாலர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்பு நடந்த ஆலோசனைப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் தலைமையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் 111 உறுப்பினரகள் நியமித்திருந்தனர். தற்போது கூடுதலாக 6 உறுப்பினர்களை நியமித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். அந்தக் கூடுதல் ஆறு உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு உள்ளது. முன்னாள் எம்பி கோபால், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, பாஸ்கரன், கழக அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல், எஸ். ஆசைமணி, சிவா. இராஜமாணிக்கம் ஆகியோரே அந்த கூடுதல் ஆறு உறுப்பினர்கள் ஆகும்.
ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!
