ஈரோடு மற்றும் கரூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு

 

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஈரோடு சேலம், கரூர் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் பவானி பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யும் முதலமைச்சர், கரூர் மாவட்டத்திலும் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version