கோவை தனியார் கல்லூரியில் மாணவிகள் பொங்கல் வைத்து அம்மி அரைத்து, கயிறு இழுத்து சமத்துவ பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
வரும் ஜனவரி 15ம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமந்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவிகள், தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சேலை உடையணிந்து வந்தனர். அவர்கள் மண் பானைகளில் வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் வைத்தும், கோலமிட்டு கரும்பு, மஞ்சள், தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட படையல் பொருட்கள் வைத்து வழிபட்டனர். பொங்கல் பானையில் இருந்து பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக கூக்குரல் இட்ட அவர்கள், மாடு, கன்றுக்குட்டிக்கு மஞ்சள் தெளித்து குங்குமம் வைத்து பொங்கல் ஊட்டி, மாட்டு பொங்கலும் கொண்டாடினர். இந்த சமத்துவ பொங்கலின் போது நடைபெற்ற உரியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
Discussion about this post