ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக ஆலோசனைக் கூட்டமானது ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை உரை ஆற்றினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.வி.இராமலிங்கம், கே.சி.கருப்பண்ணன், ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என்று பல முக்கிய நிர்வாகிகளும் கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், இந்த 21 மாத ஆட்சிகாலத்தை திமுக வீண் அடித்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் விளம்பரம் செய்வதிலேயே கவனத்தை செலுத்தி வந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். அதிமுக கொண்டு வந்தது என்பதற்காகவே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் தேர்தலுக்காக திமுகவினர் எவ்வளவு வாக்குறுதி வேண்டுமானாலும் கொடுப்பார்கள் ஆனால் நிறைவேற்றமாட்டார்கள் என்று தொடர்ந்து பேசினார்.
எதிர்கட்சித் தலைவரின் உரையினை விரிவாக காண்பதற்கு கீழுள்ள காணொளியை சுடுக்கவும்!
Discussion about this post