நாளையிலிருந்து இரண்டு நாட்களுக்கு எதிர்கட்சித் தலைவர் பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக களமிறங்கக்கூடிய கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்களை ஆதரித்து கழக இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஈரோடு கிழக்கி இரண்டு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்களிடையே அவருக்கு அமோக வரவேற்பு இருந்தது. அவர் செல்லும் வழியெங்கும் மக்கள் திரளாக இருந்து அவரை வரவேற்றார்கள்.

இதனிடையே நாளையும் நாளை மறுநாளும் எதிர்கட்சித் தலைவர் அவர்கள் ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். நாளை மாலை 5 மணியளவிலும், நாளை மறுநாள் பகல் 2 மணியளவிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். நாளை மறுநாள் 5 மணியுடன் அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபடுதற்கு இறுதி நாளாகும்.

Exit mobile version