ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது கடந்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்று நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதிமுக சார்பாக போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு வாக்கள பெருமக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நன்றியைத் தெரிவித்தார். மேலும் இந்தத் தேர்தலுக்காக உழைத்த முன்னாள் அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் போன்றவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
இந்தத் தேர்தலில் அதிமுக ஜனநாயக வழியில் பங்குபெற்றது. ஆனால் திமுக கூட்டணியானது மக்களை ஏமாற்றி, பணம், குக்கர், சிக்கன் பிரியாணி போன்றவற்றைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஆடுகளைப்போல வாக்களர்களை பட்டியில் அடைத்து பட்டி பார்முலா என்ற ஒரு ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு யுக்தியைக் கையாண்டு அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திமுகவின் இந்த ஈரோடு கிழக்கு பார்முலாவானது ஜனநாயகத்தினைக் குழிதோண்டி புதைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் விரிவான அறிக்கை பின்வருமாறு உள்ளது.