சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்த தினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாமன்னர் பூலித்தேவனின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் பூலித்தேவரின் பிறந்த நாளையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேய அரசை எதிர்த்து, நெஞ்சுரம்கொண்டு போரிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு பல வெற்றிகளை கண்ட, சரித்திரம் போற்றும் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 307-வது பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி அவர்தம் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்” என்று பதிவிட்டுள்ளார்.