நிஃபா வைரசை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் தாக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 86 பேரின் ரத்த மாரிதி புனேவில் உள்ள தேசிய மருத்துவ ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், நிஃபா பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நோய் உறுதி செய்யப்படும் பட்சத்தில் உரிய மருத்துவ சிகிச்சை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஷைலஜா, நிஃபா வைரஸ் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.