அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ஆங்கில பேச்சுப் பயிற்சியை அறிமுகப்படுத்த, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த உள்ள இந்த பயிற்சிக்காக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெறும் போது, இந்த பயிற்சியை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Discussion about this post