சிவகாசியில் அமமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமமுக நிர்வாகி நடத்தி வரும் ஆலையில் பணிபுரியும் பணியாளர்களை நிர்பந்தபடுத்தி அழைத்து வந்ததால் கூட்டத்தின் வரவேற்புரையின் போதே அனைவரும் கலைந்து சென்றனர். அவர்கள் அமருவதற்கும் சரியான ஏற்பாடுகள் செய்யாததால் பணியாளர்களே நாற்காலிகளை தலையில் தூக்கி சென்றது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதில் கூட்டத்தின் போது மாவட்ட செயலாளர் ஒருவர் வீடியோ கால் பேசிகொண்டிருந்தது அமமுகவினருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறையை மீறும் வகையில் கூட்டத்திற்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்துள்ளனர்.