தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்க முயன்ற தினகரனின் அமமுக அமைப்பைச் சேர்ந்த 4 பேரை, அதிமுக, பாஜக கட்சியினர் பிடித்து, தேர்தல் பறக்கும்படையினரிடம் ஒப்படைத்தனர். கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் அமமுக அமைப்பினர் வீடு விடாக சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போது அந்த தொகுதிகுட்பட்ட தென்றல் நகர், ராஜேந்திரா நகர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்களர்களின் வீடுகளுக்கு சென்று, வாக்களர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை எண், செல் நம்பர் உள்ளிட்டவைகளை குறித்து கொண்டு செல்கின்றனர்.
வாக்காளர்களிடம், வரும் 16 ஆம் தேதி பரிசு பெட்டி வரும் எனவும், வந்தவுடன் தினகரனுக்கு ஓட்டளிக்குமாறும் கூறிச் செல்கின்றனர். இதை அறிந்த அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள், அவர்களை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
Discussion about this post