ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தோப்பில் புகுந்த காட்டு யானைகள் வாழை, மா, தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வண்ணாபாறையில் அப்துல் மஜீது என்பவர் 8 ஏக்கரில் வாழை, தென்னை, மாமரங்களை விவசாயம் செய்துள்ளார். வறட்சி காரணமாக வனப் பகுதிக்குள் நீர் இல்லாததால் காட்டு யானைகள், கூட்டம் கூட்டமாக அவரது தோப்பில் புகுந்து சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள வாழை, தென்னை, மா மரங்களை சேதப்படுத்தின. இதனால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனவும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post